இளையதளபதி எண்ணும் மந்திர சொல்லை சொல்லாத இயக்குனர்களே இல்லை. அந்த அளவுக்கு அனைத்து இயக்குனர்களும் ஒருமித்த கூறும் விஷயம், “இளையதளபதியுடன் விரைவில் ஒரு படம் பண்ணுவேன்”. அதிலும் இயக்குனர் கெளதம் மேனன் சன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் , இளையதளபதியுடன் நான் படம் செய்ய மாட்டேன் என்று சொன்னால் நான் ஒரு முட்டாள் அதுமட்டுமன்றி இழப்பு எனக்குத்தான். இந்த வரிகள் இளையதளபதியுடன் சேர்ந்து ஒரு படத்தை எடுப்பதற்கு முன்னணி இயக்குனர்கள் எந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளார்கள் என்று தெரிகிறது.
துப்பாக்கி என்னும் ஒரு படம் வந்தது முதல் இளையதளபதியின் அழகும், ஸ்டைலும் நன்றாக மெருகேறிவருகிறது என்றுதான் கூறவேண்டும். இதற்காக இளையதளபதியின் ரசிகர்கள் இயக்குனர் முருகதாசுக்கு என்றென்றும் நன்றிகளை தெரிவிப்பார்கள். முன்னணி இயக்குனர்கள் முருகதாஸ், கெளதம் மேனன், லிங்குசாமி, அமீர் போன்றோர் இளையதளபதியுடன் படம் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
அதே போல் இளையதளபதிக்கும் வித்தியசமான கதாபாதிரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். நடிப்புக்கு தீனி போடு வகையில் இருந்தால் யோசிக்காமல் ஒத்துக்கொள்ளுவர் என்கின்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதோடு தற்பொழுது நடித்து வரும் தலைவா படத்தின் விளம்பரங்களை 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு பின்னர் செய்யவும் என்று அறிவுறுத்தியுள்ளார். தன்னால் பிறரின் படிப்பு கெட்டு விடக்கூடாது எண்ணும் நல்ல மனம் படைத்த இளையதளபதி.
No comments:
Post a Comment