இளையதளபதி விஜய் என்றாலே அதிரடிதான், துப்பாக்கியின் பெரும் வெற்றி சுனாமியை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவா படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய்யின் அடுத்த படம் , ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் “ஜில்லா”.
இந்த படத்தில் மீண்டும் ராசியான காஜல் அகர்வாலுடன் ஜோடி சேருகிறார் இளையதளபதி. இவர்களுடன் மோகன்லால், மகத் ராகவேந்திர ஆகியோரும் நடிக்கின்றனர். முன்னர் சொன்னா படங்களை விட “ஜில்லா” படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படத்திற்கு பெரும் பட்ஜெட் ஒதுக்கியுள்ளார் தயாரிப்பாளர்.
மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இமான், இவர் ஏற்கனவே விஜயின் படமான தமிழன் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றி படங்களை தொடர்ந்து இமான் இந்த படத்திலும் வெற்றியை தொடர்வார் என்று நம்பிக்கை வைத்துள்ளனர் திரையுலகினர்.
விரைவில் மேலும் செய்திகளுக்காக இணைந்திருங்கள். ஜில்லா படத்தை பற்றி இமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி
No comments:
Post a Comment