இளையதளபதியின் தலைவா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் முடிவுடைந்த்ததை அடுத்து படக்குழு ஆஸ்திரேலியா பயணமாகின்றனர் , இந்நிலையில் 11ம் திகதி அடுத்த படமாகிய ஜில்லா பூஜையுடன் துவங்குகிறது. துப்பாக்கியின் எதிர்பார்ப்பு அலை இந்த படத்திலும் தொடர்கிறது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார்.
இந்த படத்தின் செய்திகளை மிகவும் ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் இளையதளபதியுடன் மோகன்லால். காஜல் அகர்வால்,நாசர், மகத் ராகவேந்திரா நடிக்கின்றனர், தற்பொழுது யார்களுடன் “பரோட்டா” சூரியும் இணைகிறார். இவரின் நகைச்சுவை தனி பாணி. இவரின் நடிப்பு சமீபகாலமாக நன்றாக பேசப்படுகிறது. இளையதளபதியுடன் சேர்வதால் நகைச்சுவையிலும் இருவரும் பட்டய கெளப்புவார்கள் என்று நம்பலாம்.
இந்த படத்திற்கு இசை இமான், இவர் மதன் கார்க்கியுடன் இணைந்து பாடல்களுக்கான வேலைகளை துவங்கிவிட்டார்.
படத்தை நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஹிந்தியில் பல படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்தும் உள்ளார். மிளகா, முத்துக்கு முத்தாக ஆகிய படங்கள் உதாரணம். இந்த படத்தை இயக்குகிறார் ஆர்.டி.நேசன்.
பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் ஜொலிக்கிறது ஜில்ல படக்குழு.
பின்குறிப்பு: படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் இளையதளபதியின் ரசிகர்கள் வடிவமைத்தமை, இன்னும் படக் குழுவினர் போஸ்டர் எதையும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment