சிங்கம் படத்தில் வரும் துரைசிங்கம் கேரக்டருக்கும் முதலில் ஹரி தேர்வு செய்தது விஜய்யைதான். ஆனால் அந்நேரம் விஜய் பிஸியாக வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. இதில் ஹரிக்கு சிறிது ஏமாற்றம்தான்.
இருந்தாலும் தற்போது விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க முடிவு செய்து விஜய்யிடம் சம்மதமும் வாங்கிவிட்டாராம் ஹரி. விஜய் தற்போது நடித்துகொண்டிருக்கும் ஜில்லா மற்றும் முருகதாஸின் படங்களை முடித்துவிட்டு, ஹரிக்கு கால்ஷீட் கொடுப்பதாக உறுதி கூறியிருக்கின்றார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகா படுகோனேயிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது வேந்தர் மூவிஸ்.
கார்த்தியை வைத்து ஹரி இயக்குவதாக இருந்த படம் டிராப் ஆகிவிட்டது. சிங்கம் 3 பட வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கின்றார் ஹரி.
No comments:
Post a Comment