கொலிவுட்டில் தலைவா படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய், ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ.20 கோடியாக பேசப்பட்டுள்ளதாம். ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்கள், தங்களின் நூறாவது படத்தில் கூட கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதில்லையாம்.
ஆனால் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உட்பட பலருக்கும் கோடி ரூபாய் சம்பளம் ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டது. விஜய்யின் பூவே உனக்காக படம் வரை உயராத சம்பளம் காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்பு அதிகமாக உயர்ந்ததாம். தலைவா படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.18 கோடி என்றும் அதற்கு அடுத்த படமான ஜில்லாவில் இவருக்கு ரூ.20 கோடிக்கு மேல் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment