தலைவா படம் இன்று ரிலீசாகாத நிலையில், நாகப்பட்டினம் சென்றுள்ள விஜய், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துகிறார். அவருக்காக திருப்பலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அந்த மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் செய்துள்ளது.
விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது, தமிழகம் தவிர. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பையிலும் படம் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் எங்கும் இந்தப் படம் திரையிடப்படவில்லை.
எப்படியாவது படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் கொடநாட்டுக்கே போய் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு தங்கிய விஜய், பின் அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு வந்தார். இன்று மாலை அவர் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மேரி மாதாவின் தேவாலயத்துக்குச் செல்கிறார்.
தேவாலயத்தில் சிறப்புப் பிராத்தனை மற்றும் திருப்பலிக்கு விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பங்கேற்று பிரார்த்தனை நடத்துகிறார் விஜய்.
No comments:
Post a Comment