விஜய்யின் ‘தலைவா’ படம் தமிழ்நாட்டைத் தவிர, அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தலைவா படத்தைப் பார்ப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வெளியாகாத போதிலும், வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது தலைவா. நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 16 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டைத் தவிர்த்து பிற இடங்களில் தலைவா வசூல் விவரம் உங்கள் பார்வைக்கு.
கேரளா: 2.10 கோடி UAE : 2.90 கோடி மலேசியா: 1.60 கோடி ஆஸ்திரேலியா: 1.90 கோடி யுகே: 2.20 கோடி பிற இடங்கள்: 4.30 கோடி
மொத்தத்தில் 15.90 கோடிகளை ஒரே நாளில் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அறிவித்தபடி ரிலீசாகி இருந்தால், புதிய சாதனை படைத்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment