விஜய்க்காக தத்துவமான குத்துப்பாடல் ஒன்று உருவாகியுள்ளது.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.
படத்தில் சூப்பர் பாடல்களை கொடுக்க வேண்டும் என்று தனி கவனம் செலுத்தி ட்யூன்களை அமைத்து வர, மதன் கார்க்கி எழுதியுள்ள தத்துவ குத்துப் பாடல் பாடல் ஒன்றை சமீபத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக மதன் கார்க்கியே தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment