‘துப்பாக்கி’படத்துக்குப்பின், விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இந்த படத்திற்கு தீரண், வாள், அதிரடி என பல பெயர்களில் எந்த பெயர் வைப்பது என்று குழப்பத்தில் இருந்தனர்.
தற்போது இந்த படத்திற்கு கத்தி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்த பெயர் விஜய் உள்பட அனைவருக்குமே பிடித்திருப்பதால், இன்று காலை சமுக தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, பாலிவுட் நாயகன் நீல் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
துப்பாக்கியைப் போலவே கத்தியும் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தலைப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment