விஜய்யின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படத்திற்கு கத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சமந்தா, நடிகர் விஜயுடன் அவரது 57 வது படத்தில் நான் நடிக்கிறேன். ஹைதாராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதில் நடிகர் விஜயுடன் ஒரு பாடலில் நான் நடனமாடினேன் அவருடன் நடனமாடும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.
அவரின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment