ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் பரபரப்பாக தனது 57வது படமான கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையில் விஜய்யின் 58ஆவது படத்தை சிம்புதேவன் இயக்கவுள்ளாராம். இதனால் இவர்களின் கூட்டணியில் வரும் படத்தை பற்றி இப்பவே எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகிவிட்டன.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிம்பு தேவனுக்கு முழு சுதந்திரம் அளித்து இப்படத்தை எடுக்க கூறியுள்ளார்களாம். இதனால் சிம்பு தேவன் நல்ல நடிகர்களையும், கலைஞர்களையும் கைப்பற்றியுள்ளார்.
தற்போதைய தகவலின்படி, நான் ஈ படத்தில் நடித்த சுதீப் இந்த படத்தில் வில்லனாகவும், ஸ்ருதிஹாசன் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளனர்.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கும் மேலாக ஏ.ஆர். ரகுமானை இசையமைப்பாளராகவும், முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும் இப்படத்தில் இணைய, விஜய்யின் 58ஆவது படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
No comments:
Post a Comment