"சுப்ரமணியபுரம்" என்ற ஒரே படத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் சசிகுமார். பிறகு இவர் கதையின் நாயகனாக நடித்த "நாடோடிகள்", "போராளி", "சுந்தரபாண்டியன்" போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைய தற்போது தான் இயக்குனர் என்பதை மறந்து தொடர்ந்து நடிகனாகவே நடித்து கொண்டு இருக்கிறார்.
இவர் "இளைய தளபதி" விஜய் அவர்களை வைத்து ஒரு படம் இயக்க போவதாக கோலிவுட் வட்டாரங்கள் சொல்லி வந்த நிலையில் அதை பற்றி அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் "நான் விஜய்க்கு கதை கூறியது உண்மை தான், ஆனால் பிறகு அதற்கான வேலைகள் ஏதும் தொடங்க வில்லை, தற்போது விஜய் பெரிய ரசிகர் பலத்தை கொண்ட நடிகர் அதனால் அவருக்கு படம் பண்ணுவதென்றால் நானும் ஒரு பெரிய கூட்டணியுடன் தான் அவரை போய் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment