சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முத்து படம் ஜப்பானில் திரையிட்ட போது அங்குள்ள மக்கள் படத்தை விரும்பி பார்த்தார்களாம். அதிலிருந்து அங்கு ரஜினிக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.
மேலும் ஜப்பான் மக்கள் சமீபத்தில் கூட ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் பல்லேலக்கா என்ற பாடலை பாடி வெளியிட்டிருந்தனர். அந்தளவுக்கு ஜப்பான் மக்களையும் கவர்ந்திருக்கிறார் ரஜினி.
அவரைத் தொடர்ந்து இப்போது விஜய்க்கும் ஜப்பானில் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்களாம். ஜப்பானில் வெளியாகும் விஜய் படங்கள் சமீபகாலமாக நல்ல வசூலை குவித்து வருகிறது.
விஜய் படங்கள் என்றால் தமிழ்நாட்டில் இருக்கும் ஓப்பனிங் போலவே ஜப்பானிலும் நல்லதொரு ஓப்பனிங் இருந்து வருகிறதாம்.
இந்த நிலையில், நேற்று ஜப்பானிலும் விஜய் ரசிகர்கள் விஜய்யின் 40வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
தலைவா நீ கலக்கு தலைவா….
No comments:
Post a Comment