தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்....நரேந்திர மோடிக்கு விஜய் கடிதம்!... - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, June 20, 2014

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்....நரேந்திர மோடிக்கு விஜய் கடிதம்!...

சினிமாவிற்கு விதிக்கப்பட்டு இருக்கும் சேவை வரியை நீக்கி, சினிமாவை காப்பாற்றுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், தமிழகத்தில் பிரசாரம் செய்ய மோடி வந்தார்.

அப்போது மோடியை, நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமரான போது அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சினிமாவை காப்பாற்ற கோரி, மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுத்து வரும் பல அரிய திட்டங்களும், அதிரடி நடவடிக்கைகளும் பாராட்டுதலுக்குரியது. எல்லா துறையை போல சினிமாவையும் நீங்கள் நேசிப்பவர் என்பதால் இந்த கோரிக்கையை தங்களுக்கு வைக்கிறேன். சினிமா என்பது மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் கிடையாது, அரசுக்கு பல கோடி வருவாயை பெற்று தரும் துறையாகும். அப்படிப்பட்ட துறை கடந்த பல ஆண்டுகளாக பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

சேவை வரியால் பாதிப்பு...மத்திய- மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

கோடிக்கணக்கான தொழிலாளர் வேலை இழப்பர்...குறிப்பாக சினிமா தொழிலில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும் விரக்தியாலும் வேறு தொழிலுக்கு செல்லும் மற்றும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிப்பதோடு இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

சினிமா துறையை காப்பாற்றுங்கள்..கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத்குமார், மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், பவன்கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர்கள் சம்மேளனமும் சேவை வரியை ரத்து செய்ய போராடினார்கள். மனுக்களும் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது. ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலக அரங்கில் இந்திய சினிமா முதலிடம் பிடிக்கும்...இதன் மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும் பல புதிய முதலீட்டாளர்களும், புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகமூட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad

Responsive Ads Here