தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் தருணம் விரைவில் நடக்கயிருக்கிறது. இன்று கோலிவுட்டில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்.
இவர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, தயாரிப்பாளர்களுக்கும் செம்ம விருந்து தான், தற்போது இதற்கான நேரம் வந்துவிட்டது. மேலும் படத்தில் ரசிகர்கள் விரும்பும் இரண்டு இயக்குனர்கள் பணியாற்றப்போகின்றனர்.
அஜித்தை வைத்து மாபெரும் வெற்றிப்படம் கொடுத்த வெங்கட் பிரபு திரைக்கதை அமைக்க, விஜய்யை வைத்து மெகா ஹிட் கொடுத்த முருகதாஸ் படத்தை இயக்கவுள்ளார். ஏன் ஒருவரே படத்தை எடுத்தால் என்ன? என்றால் அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
வெங்கட் பிரபு தான் முதலில் இப்படத்தை இயக்குவதாக இருந்தது, ஆனால் சூர்யாவுடன் இவர் இணையயிருப்பதால் திரைக்கதை அமைக்கும் பணியை மட்டும் செய்யவுள்ளாராம். கத்தி படத்திற்கு பின் முருகதாஸ் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாததால் அவரே படத்தை இயக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இப்படத்திற்காக தற்போது இருவரும் ஈசிஆரில் உள்ள ஒரு பங்களாவில் சந்தித்து கதை விவாதம் நடத்தி வருகின்றனராம். இப்படத்தை ஏற்கனவே அன்பழகன் தயாரிப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment