தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என தங்கள் மனதில் எண்ணிக்கொண்டு இருக்க. அந்த ஜோடி உண்மையிலேயே ஒரு படத்தில் இணைந்தால் கொண்டாட்டம் தான்.
அந்த வகையில் ஒவ்வொரு படத்தையும் தன் வித்தியாசமான கற்பனையை கொண்டு இயக்குபவர் செல்வராகவன். இவர் தற்போது தன் தம்பி தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் செல்வா யதார்த்தமாக நடிகர் விஜய்யை பார்க்க, ஒன் லைன் கதை மட்டும் சொல்லியிருக்கிறார். இதை கேட்ட விஜய்க்கும் பிடித்து போக முழு கதையும் தயார் செய்ய சொல்லிவிட்டாராம்.
தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கத்தி படத்தை முடித்த கையோடு சிம்புதேவன் படத்தில் நடிக்கயிருக்கிறார் இளைய தளபதி. இதை அடுத்து செல்வராகவன் படத்தில் நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment