விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியான தாண்டவம் படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்பதால், அதற்கு முன்பு வரை, டைரக்டர் ஏ.எல்.விஜய் சொல்லியிருந்த கதை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த நடிகர் விஜய்க்கு இப்போது அந்த கதை மீதிருந்த நம்பிக்கை போய் விட்டதாம். இதற்கிடையே தாண்டவம் படத்தின் கதை எனக்கு சொந்தமானது என்று ஒரு உதவி இயக்குனரும் போர்க்கொடி பிடித்ததால், கதை விஷயத்தில் ஏ.எல். விஜய் கொஞ்சம் வீக்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
அதனால் அவர் கதையை நம்பியிறங்கி நாமும் காலியாக வேண்டாம் என்று உஷாராகி விட்டார் விஜய். அதன்காரணமாக, தெலுங்கு, இந்தியில் வெற்றி பெற்ற நல்ல கதைகளை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறாராம். இதனால் மாதக்கணககில் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த ஏ.எல்.விஜய், தன் மீது விஜய் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பதை புரிந்து கொண்டு, ஆந்திரா, மும்பையில் சமீபத்தில் வெற்றி பெற்ற அத்தனை படங்களின் சி.டிக்களையும் கொண்டு வந்து உதவி இயக்குனர்கள் படைசூழ கொட்ட கொட்ட பார்த்துக்கொண்டிருக்கிறார்.

No comments:
Post a Comment