தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அது போல ரசிகர்கள் இருக்கும்வரை தலைவா அஞ்சான். படம் கடந்த 9ம் திகதி வெளிவந்திருக்க வேண்டியது, பல்வேறு சிக்கல்களால் வெளிவரமுடியாமல் திணறியது. பலர் இதுதான் இளையதளபதியின் அஸ்தமனத்திற்கு அறிகுறி என்றெல்லாம் ஆனந்த கூத்தாடினார்கள்.
ஆனால் ஆடிய அனைவருக்கும் ஆப்பு வைத்துவிட்டு திமிருடன் வரும் 20ம் திகதி அனைத்து தடைகளையும் நொறுக்கிவிட்டு வெற்றியுடன் வெளிவருகிறான் “தலைவா”. படத்தை முடக்க பல்வேறு சக்திகள் பல்வேறு விதத்தில் முயற்சி செய்தாலும், அவற்றை எல்லாம் முறியடித்து , ரசிகர்களுடன் பேராதரவுடன் வெளிவருகிறான்.
இது ஒரு நிச்சய வெற்றிப்படம், ரசிகர்கள் பொறுமை காத்து மௌனம் காத்து தங்களது தலைவனுக்கு ஆதரவு காட்டினார்கள். அவர்களின் பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இது. அதே போல் பல்வேறு விஷமிகள் படத்தின் டி.வி.டிக்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்விளைவை விளைவிக்க இருந்த நிலையில் பல்வேறு கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர் ரசிகர்கள். அநியாயத்திற்கு எதிராக போராட சற்று யோசிக்காதவர்கள் இளையதளபதி ரசிகர்கள்.
படம் வெளிவரப்போகிற வெற்றி செய்தியை கேட்ட ரசிகர்கள், “போ போ இந்த வாட்டி மிஸ் ஆகாது” என்றும் “I am Waiting” என்றும் இணையதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment