சென்னை பாக்ஸ் ஆபிஸ்: முதல் இடத்தைப் பிடித்த 'தலைவா - IlayaThalapathy Vijay

IlayaThalapathy Vijay

Vijay (born 22 June 1974) is an Indian actor, playback singer and producer, who works in the Tamil film industry. Son of film director and producer S. A. Chandrasekhar, he started his career as a child actor in the movie Vetri and later made his debut as a lead actor in the 1992 film Naalaya Theerpu.

test banner

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 27, 2013

சென்னை பாக்ஸ் ஆபிஸ்: முதல் இடத்தைப் பிடித்த 'தலைவா

ஆகஸ்ட் மாதம் மட்டும் 20 க்கும் மேற்பட்ட படங்கள் கோலிவூட்டில் ரிலீசாகி விட்டன. சில படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருக்கும் போது, குறிப்பிட்ட படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1. தலைவா
ரிலீசாவதற்கு முன் எதிர்கொண்ட பிரச்சனைகள், தாமதம், எதிர்மறை விமர்சனங்கள் என எதுவுமே படத்தின் வசூலை பாதிக்கவில்லை. செவ்வாய்க்கிழமை வெளியான இந்தப் படம் முதல் 3 நாட்களில் சென்னையில் மட்டும் 4 கோடியை வசூல் செய்துள்ளது. வார இறுதியில் மேலும் 4 கோடியை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர்.
2. தேசிங்குராஜா
ஒன் லைன் காமெடியுடன் ரிலீசாகி இருக்கும் இந்தப் படத்தைதான் தலைவாவுக்கு எதிராக துருப்பு சீட்டாக திரையரங்கு உரிமையாளர்கள் இறக்கினார்கள். வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 88 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
3. ஆதலால் காதல் செய்வீர்
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் வரவேற்பை பெற்ற அளவுக்கு விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் 20.3 லட்சங்களையும், வார நாட்களில் 22 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.6 கோடி.
4. ஐந்து ஐந்து ஐந்து
வருடக்கணக்கில் ஷூட் செய்யப்பட்ட இந்தப் படம் ஏமாற்றி விட்டது எனக் கூறலாம். பரத்தின் நடிப்புக்கு வரவேற்ப்பு கிடைத்தாலும், திரைக்கதை சொதப்பி விட்டதால், எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. 3 வாரங்களில் இப்படம் சென்னையில் 1.6 கோடியை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 2.7 லட்சங்கள். வார நாட்களில் 3.7 லட்சங்கள்.
5. சிங்கம் 2
100 கோடி வசூலை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தப் படம் ரிலீசாகி 8 வாரங்கள் ஆகி விட்டன. படத்திற்கான பார்வையாளர்கள் எல்லா திரையரங்குகளிலும் கணிசமாக குறைந்துவிட்டதாலும், 30 ஆம் தேதி அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளியாவதாலும் சிங்கம் 2 வசூல் வரும் நாட்களில் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

No comments:

Post Top Ad

Responsive Ads Here