‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலின் மூலம் தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்கிறார் விஜய்.
தலைவா படத்தில் வாங்கண்ணா, வணக்கங்கண்ணா என விஜய் பாடிய பாடல்தான் அந்தப்படத்தின் சூப்பர்ஹிட் பாடல்.
விஜய் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவார். இப்போது மீண்டும் டி.இமானுடன் சேர்ந்திருக்கிறார்.
ஜில்லா படத்திற்காக ‘கண்டாங்கி, கண்டாங்கி’ என ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து விஜய் பாடியிருக்கும் இந்தப்பாடல்தான் அவரின் ரசிகர்களுக்கு 2014ம் ஆண்டின் பொங்கல் வாழ்த்தாக இருக்கப்போகிறது.
இந்தப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கிறார்.
அதுவும் 2002ல் வெளியான யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வைரமுத்து மீண்டும் விஜய்க்கு பாடல் எழுதுவது அதிசயமான நிகழ்வுதான் என்கிறது கொலிவுட் வட்டாரம்.
No comments:
Post a Comment