விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். ஆனால் அதன்பிறகு விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ஜில்லா படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று தற்போது பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இமான், இந்த முறை விஜய் படத்தின் அத்தனை பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் உட்கார்ந்து விட வேண்டும் என்று படத்திற்கு பூஜை போட்ட நாள் முதலே டியூன் போடத் தொடங்கி விட்டாராம்.
அதோடு, தான் உருவாக்கிய டியூன்களை விஜய்யிடம் போட்டு காட்டி அவர் ஓ.கே செய்த டியூன்களையே அப்படத்தின் பாடலாக்கியிருப்பவர், ஒரு பாடலை விஜய்யை பாட வைத்து விட்டார். கண்டாங்கி கண்டாங்கி என்று தொடங்கும் அப்பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கிறார் விஜய்.
பாடி முடித்தவர், எனது ஹிட் பாடல் வரிசையில் இந்த பாடலும் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கருத்து சொல்லி இமானின் இசைத்திறமையையும் மனதார பாராட்டினாராம். அதனால் மிகுந்த உற்சாகத்தில் காணப்படுகிறார் இமான்.
No comments:
Post a Comment