தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். இவர்கள் படம் தனித்தனியாக வந்தாலே அன்றைய தினம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், அப்படியிருக்க இருவரின் படமும் ஒரே நாளில் வெளிவந்தால் சரவெடி தான்.
ரஜினி நடித்த கோச்சடையான் படம் வெற்றியை தந்தாலும் இதில் ரஜினிக்கு முழு திருப்தியில்லை, அதானல் உடனே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்தார், இப்படம் கே.எஸ்.ரவிகுமார் இயக்கம் என்பதால் கண்டிப்பாக படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும், மேலும் வரும் தீபாவளிக்கே படத்தை ரிலிஸ் செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டது.
ஏற்கனவே கத்தி படமும் தீவாவளியன்று வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், விஷால் படம் ‘பூஜை’ போட்ட அன்றே தீபாவளி தான் ரிலிஸ் என்று உறுதியளித்துவிட்டனர். ஆக தமிழக ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்துக்கொண்டிருக்கிறது. மேலும் இதில் எந்த படம் பின்வாங்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment