கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணை தாண்டிவருவாயா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் மற்றும் சூர்யாவுடன் - 'கத்தி' மற்றும் 'அஞ்சான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விஜயுடன் நடிக்கும் அனுபவம் பற்றி கேட்டபோது "விஜய் எப்போதுமே கூலாக இருப்பார், அதனால் அவருடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது".
மேலும் கத்தி படத்தின் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அது அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment