தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் பலத்தை கொண்டவர் விஜய். இவர் படத்தின் கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனனில் இவரை வைத்து படம் தயாரித்தால் மினிமம் கேரண்டி லாபத்தை பார்த்துவிடலாம்.
ஆனால் தற்போது விக்ரம் மார்க்கெட் அப்படியில்லை, கடைசியாக அவர் ஹிட் கொடுத்து வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை விட எல்லோருக்கும் பிடித்த நடிகர் இவர்.
விக்ரம் மலை போல் நம்பியிருக்கும் படம் ஐ. இப்படத்தின் ரிலிஸ் தேதி எப்போது என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வந்துள்ளது.
இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் எனவும், அன்றைய தினம் விஜய்யின் கத்தியும் வரயிருப்பதால் எந்த படத்தை எடுப்பது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்கள் குழம்பியிருக்கின்றனராம்.
No comments:
Post a Comment