ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தர்கா மிகவும் பிரபலம். இந்த தர்காவுக்கு சமீபத்தில் இளைய தளபதி விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் வந்து தொழுகை செய்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவாகும் ‘கத்தி’ படத்தின் சில காட்சிகளே எடுப்பதற்காகவே அங்கு சென்ற இவர்கள் படத்தின் இடைவெளியின்போது இங்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, கடப்பாவில் உள்ள இந்த தர்கா பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்தது மனதிற்கு அமைதியாகவும், ஒரு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது என்றார். இந்த தர்காவுக்கு ஏற்கெனவே ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment