'கத்தி' படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம்.
படத்தின் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் இயக்குநர் சிம்புதேவனும், ஒளிப்பதிவாளர் நட்ராஜூம் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக விஷூவலில் புதுமை காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
அதனால், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
பாலிவுட் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டைப் போல , விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இருக்க வேண்டும் என்பதால் விதவிதமான லொக்கேஷன்களில் ஷூட்டிங் எடுக்க முடிவெடுத்துள்ளார்.
இதனால், இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் இன்னும் ஸ்மார்ட்டாகத் தெரிவார் என்று சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment